மக்கள் உயிரை காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் மீண்டும் கொரோனா பரவல், பொது முடக்கம், அதீத கட்டுபாடுகள் என்ற சமூக நெருக்கடியை உருவாக்கி, தேர்தலை நிறுத்தி, ஜனநாயகத்தையும் முடக்கி, அதன் வழியே ஒரு ஆதாய அரசியலை முன்னெடுக்கும் முயற்சிகளை ஆதிக்கவர்க்கம் திட்டமிடுகிறதோ என்ற அச்சம் வருகிறது..! நெருக்கடியான காலகட்டங்களில் மனித நேயம் மேலெழுந்து, மக்களை அரவணைக்க வேண்டும். ஆனால், மனித நேயத்தை மறக்கடித்தனர். நெருங்கிய உறவுகளையே அன்னியமாக எண்ண வைத்தனர். இஷ்டத்திற்கும் கட்டுப்பாடுகளை நிர்பந்தித்து, இயல்பு நிலையை குலைத்து கொரோனா அச்சங்களை பல மடங்கு பூதாகரப்படுத்தினர். ...