அலங்கோலமாகமாக்கப்பட்ட அரசு கேபிள் நிறுவனம் இன்னும் அதிமுகவின் கட்டுப்பாட்டிலே இருப்பது போன்ற தோற்றம் தருகிறது! உடுமலை ராதாகிருஷ்ணன் உருக்குலைத்து வைத்த நிர்வாக கட்டமைப்பையும், கையூட்டு கலாச்சாரச்சாரத்தையும் அப்படியே பின்பற்றதக்க வகையில் தான் புதிய தலைவரின் நியமனம் அமைந்துள்ளதோடு, மீண்டும் மாறன் பிரதர்ஸ் தலை தூக்கும் அபாயமும் தெரிகிறது என்கிறார்கள் கேபிள் இண்டஸ்டிரியில்! உண்மையா..? மலிவான கட்டணத்தில் தருகிறோம் என்று அரசு கேபிள் மீதான மக்களின் ஈர்ப்பை பெற்று செயல்பட்ட வகையில், முறைகேடுகளில் உச்சமாகவும், சுரண்டலில் மூர்க்கமாகவும் செயல்பட்டவர் உடுமலை ராதா கிருஷ்ணன். தனியார் டிவிக்களை ...