ஊழல் செய்வதற்காகவே போடப்பட்ட சாலை திட்டங்கள்! அதற்கு ஒத்துழைத்த அதிகாரிகள்! அதற்கான ஒப்பந்தக்காரர்கள்..என இயங்கியதே நெடுஞ்சாலைத் துறை! அப்போது நடந்த ஊழல்களை கண்டுபிடிக்க போவதாக தற்போது நடந்து கொண்டிருப்பது கண் துடைப்பா..? உண்மையா…? ஊழல் பெருச்சாலிகள் தண்டிக்கப்படுவார்களா…? கடந்த 10 ஆண்டுகளாக  தமிழக நெடுஞ்சாலைத்துறையில்  பகற்கொள்ளை நடத்திக் கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த காலக்கட்டத்தில் ஏறக்குறைய ஒரு லட்சம் கோடி ரூபாய் சாலைகளுக்கும் பாலங்களுக்கும் என செலவிடப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை பணிகளில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக முறைகேடுகள் நடந்ததை ஊடகங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன. ...

இந்த தேர்தலில் வரலாறு காணாத விதத்தில் கரன்சியை தன்னுடைய தொகுதிலும், தமிழகம் முழுமையிலும் அள்ளிவிட்டார் எடப்பாடி? இப்படி பணத்தை அள்ளி இறைப்பதற்கு எப்படியான ஊழல்களை அவர் செய்திருப்பார் என்பதற்கு இவை இரண்டும் சின்ன சாம்பிள் அவ்வளவே! தமிழக நெடுஞ்சாலைத்துறையில்  ஆன்லைன் மூலமாகத்தான் டெண்டர் பெறப்படுகிறது,  டெண்டர்  திறக்கப்படும்  வரை யார் டெண்டர் போட்டிருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியாது’’  என்று  எடப்பாடியார் உரைவீச்சு! ஆனால் உண்மை நிலவரம் வேறு. வேலைக்கான தொகையை மட்டுமே ஆன்லைனில்  குறிப்பிடுவார்கள். அத்துடன் வைப்புத்தொகை, கருவிகள் தளவாடங்கள் சான்றிதழ், தகுதிச் சான்றிதழ் ...

அதிமுக அமைச்சரவையில் ஒருவருக்கொருவர் ஊழலில் சளைத்தவர்கள் இல்லை தான்! என்றாலும் அதில் வேலுமணிக்கு ஒரு தனித்துவமான இடம் உண்டு! அதிகாரம் என்பதை கேள்விகளுக்கு அப்பாற்பட்ட அடக்குமுறையாகவும் கையாளத் தெரிந்த ஒரு அராஜவாதி வேலுமணி. பணம்,அதிகாரம்,அடக்குமுறை ஆகிய முப்பெரும் ஆயுதங்களுடன் தன்னை எதிர்ப்பவர்களை எந்த எல்லைக்கும் சென்று தாக்கக் கூடியவர். இதற்கு பத்திரிகை துறையிலேயே பல உதாரணங்கள் உள்ளன. கமலஹாசனைக் கூட கப்சிப் ஆக்கிய அனுபவமும் அவருக்குண்டு…! தமிழ்நாட்டிற்கு யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் என்று சொல்லிக் கொள்ளட்டும். ஆனால், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்திற்கு வேலுமணி ...

ஒருவர் நேர்மையானவர் சமரசமற்றவர் பொது நலனை பாதுகாப்பவர் என்றால்…, அவரை தலையில் வைத்துக் கொண்டாடுவதில் நமக்கு எந்த தயக்கமும் இல்லை! ’’நேர்மையானவர், கறாரானவர், ஊழலுக்கு அப்பாற்பட்டவர் ஆகவே, தான் துணைவேந்தர் சூரப்பாவை அண்ணா பல்கலையில் இருந்து தூக்கியடிக்க துடிக்கிறார்கள்…’’ கமலஹாசன் உள்ளிட்ட மேட்டுக்குடி மேதாவிகள் அனைவரும் இப்படித்தான் சொல்கிறார்கள்! அவர் நேர்மையானவர் என்பது உண்மையா? என்று பார்த்துவிடுவோம்! கொரனா வந்தது! பல்கலைக் கழகம் மூடப்பட்டது.படிப்பு தடைபட்டுள்ளது, என்ஞினியரிங் கல்வியை ஆன்லைன் மூலம் முழுமையாகவோ,முறையாகவோ கற்றுத் தரமுடியாது. ஆனால், ’’நீ வராவிட்டால் என்ன? படிக்காவிட்டால் என்ன? ...