அறம் என்றால் என்ன? என்ற வினாவிற்கு மிகச் சிறப்பாக அர்த்தம் சொன்ன பண்டை நூல் திருக்குறள்தான். வள்ளுவத்தை அடிப்படையாகக்கொண்டு எழுந்து நிற்கும் தமிழ்ச்சமூகத்தில் மனிதநேய சக்திகளுக்கு பஞ்சம் இருக்குமா? இயற்கை சீற்றங்களால் தமிழகம் பாதிக்கப்படும் போதெல்லாம் பல்லாயிரக்கணக்கான உதவும் கரங்கள் இம்மண்ணில் தோன்றி  சமூகப்பணி ஆற்றியதை அனைவரும் அறிவோம். குறிப்பாக 2015 ஆம் ஆண்டு சென்னை மாநகரம் பெரு வெள்ளத்தில் தத்தளித்த போது பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் களமிறங்கி ,ஆற்றிய பணிகளை உலகமே பார்த்து வியந்தது . ஓர் ஊருக்கு, மாநிலத்திற்கு அல்லது நாட்டுக்கு பிரச்சினை ...