இந்தியாவில் தடுப்பூசி தொடர்பான புகார்கள் எந்த அளவுக்கு தவிர்க்கப்படுகின்றன, அலட்சியப் படுத்தப்படுகின்றன? ஆனால், உண்மை நிலவரங்கள் என்ன..? என்பதைக் குறித்து புள்ளி விபரங்களுடன் தெளிவாக சர்வதேச அளவில் அம்பலப்படுத்துகிறார் பிரியங்கா புல்லா. ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தும் போது பின்பற்ற வேண்டிய கண்காணிப்புடன் கூடிய பாதுகாப்பு வழிமுறைகளை உலகசுகாதார அமைப்பு தெளிவாக தந்துள்ளது. ஆனால், அவை இந்தியாவில் பின்பற்றப்படுவதே இல்லை. ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தும் முன்பாக அவரது உடல் நிலையை அறிவது, தடுப்பூசியின் பாதக விளைவுகள் பற்றிச் சொல்லுவது, ஊசிக்குப் பிறகு பின்பற்ற வேண்டியவை, தொந்தரவுகள் ...