கோவிட் தடுப்பூசியை வலியுறுத்தி அரசு எடுக்கும் முயற்சிகளை அரசு மருத்துவர்களே எதிர்த்து முறியடிக்கும் ஒரு வித்தியாசமான சூழல் சுகாதாரத்துறையில் நிலவுகிறது! இது வரை அரசு மருத்துவர்களில் அதிகபட்சம் 25 சதவிகிதமானவர்களே கோவிட் தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளனர்! சுமார் 75 சதவிகிதமானோர் கோவிட் தடுப்பூசியை போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை! ஆனால், சுகாதாரத்துறையின் உயர் நிர்வாகப் பணியில் இருக்கும் CMO, DDHS ,JDHSHOD, Dean, HS ஆகியோர் அரசு நிணயித்த டார்கெட்டை அடைய அரசு மருத்துவர்களே தடையாக இருப்பதை கண்டு அதிர்ந்து போயுள்ளனர்! அதே சமயம் ...

இது வரை இந்திய வரலாற்றில் இல்லாத அதிசயமாக தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில் மருத்துவர்களிடமும்,அரசியல்வாதிகளிடமும்,முக்கியஸ்தர்களிடமும் ஒரு பெரும் தயக்கம் நிலவுவது கண்கூடாகத் தெரிகிறது! இது,”தங்களை சோதனை எலிகளாக்கிக் கொள்ள அரசியல்வாதிகளும், வி.வி.ஐபிக்களும்,மருத்துவர்களும் தயாராக இல்லை’ என்பதையே காட்டுகிறது! உலகத்தை அச்சுறுத்தும் ஒரு நோய்க்கு எதிராக ஒரு தடுப்பூசி கொண்டு வரப்பட்டு,அதனால் நன்மை ஏற்படுமென்றால், அதை ஏற்பதில் நமக்கு எந்த தயக்கமுமில்லை! ஆனால், நூற்றுக்கணக்கான நாடுகளும், தனியார் அமைப்புகளும் தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டிருக்கும் நிலையில் – மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு போவதற்கு முன்பாகவே – அவசர அவசரமாக ...

தடுப்பூசி தொடர்பான ஆர்வங்கள், விவாதங்கள் வேகம் பெற்றுள்ளன! ”தடுப்பூசி வந்தால் நிம்மதிப்பா..அதப் போட்டுகிட்டு எங்க வேணா பழையபடி போகலாம்…எவ்வளவு நாள் பயந்து,பயந்து வெளியில போறது’’ என பலர் நினைக்கின்றனர். இன்னும் சிலர் வீட்டைவிட்டு வெளியேறப் பயந்து முடங்கியுள்ளனர். வெளியே வருபவர்களும்,பயங்கர முன்னெச்சரிக்கையுடன், பதற்றத்துடன் நடமாடிக் கொண்டுள்ளனர். ஆகவே, தடுப்பூசி வந்தால் நல்லது என நினைப்பது ஆச்சரியமில்லை! அப்படிப்பட்டவர்கள்  இந்த கட்டுரையை மூன்று நிமிஷம் படியுங்கள். எல்லா கொடிய நோய்களும் நாம் சூழலியலுக்கு செய்யும் தவறுகளாலும், நமது பாரம்பரிய உணவு மற்றும் வாழ்க்கை முறைகளிலிருந்து விலகியதாலும் ...