நடிகர் விவேக் தன் இறப்பின் மூலம் அழுத்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்! கொரானா தடுப்பூசி போடுவதாலும், மற்றவர்களைப் போட வைப்பதாலும் நாட்டிற்கும், மக்களுக்கும் நன்மை செய்வதாக எண்ணி, தன் உயிரை பறி கொடுத்ததன் மூலம், உண்மையான விழிப்புணர்வை தந்துள்ளார்! அவருக்கு நம் கண்ணீர் அஞ்சலி. கொரானா தடுப்பூசியால் பல மரணங்கள் தொடர்ந்து சம்பவிக்கிறது என்பதை சென்ற அறம் பதிவிலும் எழுதி இருந்தோம். சமீபத்தில் ஆவடியைச் சேர்ந்த டாக்டர் பாஷா, பெரம்பலூரில் அரசு டாக்டர் தர்மலிங்கம் ஆகியோர் கொரானா தடுப்பூசியால் மரணமடைந்தார் என்பதை பல ஊடகங்கள் மறைத்தன! ...