ஒவ்வொரு கட்சியிலும் கிரிமினல்கள் நீக்கமற நிறைந்துள்ளனர். கட்சிகளே, கிரிமினல்களின் பாதுகாப்பு கவசமாகிறது. நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிறகே, சில கட்சித் தலைமைகள் குற்றவாளிகளை கட்சியில் இருந்து நீக்குகின்றனர். இன்னும் சில கட்சிகள் அதையும் செய்வதில்லை; ஒரு விரிவான அலசல்; அரசியல்வாதிகள் எப்போதுமே கடை பிடிக்கும் தந்திரம் என்னவென்றால், தன் குற்றத்தை மறைக்க எதிரணியினர் செய்த குற்றங்களை உரத்தும், ஓங்கியும் பேசுவதாகும். அந்த வகையில் சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட அதிமுக பிரமுகர் சுதாகர், மதுரை பள்ளி மாணவி கற்பழிப்பில் சம்பந்தப்பட்ட ...