விரக்தியின் உச்ச நிலையில் மக்கள் அதிபர் கோத்தபயவின் வீட்டை சூறையாடியுள்ளனர். நிலைமை கை மீறியதால், ராணுவமே செய்வதறியாது மக்கள் பக்கம் வந்து விட்டது! ரணில் விக்கிரமசிங்கே ராஜுனாமா தீர்வாகுமா? வீழ்ச்சிக்கான உண்மையான காரணங்கள் என்ன? இனி, இலங்கையின் எதிர்காலம் என்னாகும்? கொந்தளிப்பின் உச்சத்திற்கு சென்ற மக்கள் அதிபர் வீட்டையே சூறையாடி உள்ளனர். ராஜபக்சே சகோதரர்கள் மக்கள் கையில் கிடைத்திருந்தால் கைமா ஆக்கி இருப்பார்கள்! இப்படி ஓடி ஒளிவதற்கு செத்து போயிருக்கலாம்! நிலைமையை சமாளிக்க சபாநாயகர் தற்காலிக அதிபராக பதவியேற்று உள்ளார். ஆனால், நாட்டில் ஏற்பட்டுள்ள ...

பஞ்சமும், பதட்டமும், கலவரச் சூழலுமாக இலங்கை தகிக்கிறது! உணவுக்கும், எண்ணெய்க்கும் நீண்ட க்யூ வரிசைகளில் காத்து கிடந்து சிலர் உயிரிழந்துள்ளனர்! கொந்தளிப்பின் உச்சத்தில் இலங்கை மக்கள்,  ராஜபக்சே மாளிகையை முற்றுகையிட்டு போராடுகின்றனர். என்ன நடக்கின்றது? தேயிலைக்கும், மீனுக்கும் இயற்கை சூழல்களுக்கும் பெயர்போன இலங்கையின் இன்றைய சூழலுக்கு பல காரணிகள். ஆனால், அவற்றில் முதன்மையானது ஆட்சிக்குளறுபடி -Mismanagement  என்றால், அது மிகையல்ல. அதிபர் ராஜபக்சே , ” நாடு ஒரு இக்கட்டான சூழலில் உள்ளது, நான் பன்னாட்டு பண நிதியத்திடம் (IMF)  உதவி கேட்டுள்ளேன் ; அவர்களும் சில ...

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நிலக்கரியை உற்பத்தி செய்து சாதனை படைத்ததாக சென்ற ஆண்டு தம்பட்டம் அடித்தது ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சகம்! இந்த ஆண்டு நிலக்கரி உற்பத்தி குறைந்ததால் இந்தியாவில் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்திருப்பது உண்மையாகவே கவலை அளிக்கிறது. மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தன்னை திட்டமிடல் இல்லாத ஓர் அரசாகத் ஒவ்வொரு முறையும் நிரூபித்துக்கொண்டே வருகிறது.  கொரோனா தடுப்பூசிகளிலும் கூட உற்பத்தி செய்த தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு, பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து ...