கிரிப்டோ கரன்ஸி குறித்த அரசின் அணுகுமுறைகள் கருப்பு பண புழக்கத்தை கணிசமாக அதிகரிக்க எப்படி வழிவகுக்கும் என்பதையும், எளிய நடுத்தரப் பிரிவு மக்களை எப்படி நடுத்தெருவிற்கு இழுத்து வந்துவிடும் என்பதையும் சற்றே பார்ப்போம். ஒரு செயலை சரி-தவறு என்று சொல்வதற்குப் பல வருடங்கள் எடுத்து, இன்னமும் முடிவு எடுக்க முடியாமல், அல்லது எடுக்க விருப்பம் இல்லாமல் அந்த செயலை செய்பவர்களைப் பார்த்து உங்களுடைய செயலுக்குப் பணம் கொடுங்கள் என்று கேட்டால்? என்னவென்று சொல்வது. இதுதான் கிரிப்டோகரன்சி விஷயத்தில் நடந்து வருகிறது. கடந்த 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையிலும் ...