எத்தனையோ பரபரப்பு செய்திகளுக்கு இடையே கடந்த 28ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்த வழக்கு ஒன்று சமூக ஆர்வர்களிடையே அதிர்வை ஏற்படுத்தியது. முன்னணி செய்தி ஊடகங்கள் அனைத்தும் அந்த செய்தியை கட்டம் கட்டி வெளியிட்டன. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி முதலமைச்சர் தலைமையில் ஆண்டுக்கு இரு முறை கூட்டப்பட வேண்டிய கூட்டம் 2013 முதல் தமிழ்நாட்டில் இதுவரை கூட்டப்படவில்லை என்று அரசே பகிரங்கமாக உயர்நீதி மன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது என்பதே அந்த வழக்கில் வெளிப்பட்ட செய்தி. இந்த கூட்டம் நடைபெற ...