தாதாசாகேப் பால்கே விருது என்பது கலையுலகில் மிகப் பெரிய முன்னோடி சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் இந்தியாவின் உயரிய விருதாகும்! இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கும்,மேம்பாட்டிற்கும் தன்நிகரில்லா பங்களிப்பு தந்ததாக கருதப்படுவோருக்கு தரப்படுவதாகும்! இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்பட்டு வரும் தாதா சாகேப் பால்கே, இந்தியா மண்ணில் சினிமா என்ற கலையை ஜெர்மன் சென்று கற்று வந்து தானே சுயமாக முயன்று அறிமுகப்படுத்தியவர்!  அவரது முதல் படம் ராஜா ஹரிச்சந்திரா தான் இந்திய சினிமாவின் முதல்படமாகும்.ஒலியும் இல்லாத ஊமைப்படம் தொடங்கி பேசும் படம் காலகட்டம் வரை அதாவது ...