பணம், அதிகாரம், புகழ் இவற்றோடு இசை தெய்வமாக தான் ஆராதிக்கப்பட வேண்டுமென்ற இளையராஜாவின் ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால், அந்த மனிதருக்குள் இருக்கும் உண்மையான ஒரு சில ஆதங்கங்கள் தாம் தீர்ந்தபாடில்லை! ‘உண்மை என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். அது அவசியமேயில்லை. என் கற்பனையும், நம்பிக்கையுமே எனக்கு உண்மை’ என வாழும் சில மனிதர்களின் பிரதிநிதி தான் இளையராஜா! ஒரு பத்திரிகையாளனாக உருவாவதற்கு முந்தியில் இருந்தே அவர் பெல்பாட்டம் அணிந்து சுற்றிக் கொண்டிருந்த அந்த இளமைக் காலம் முதல் அவரைப் பார்த்து வருகிறேன். அவரை சில ...

சிறப்பான திரை மொழி, உயிர்துடிப்புள்ள கதாபாத்திரங்கள், சாதியையும், அரசியலையும் வெற்றிக்கான கச்சா பொருள்காளக்கி கொள்ளும் கலைநுட்பம் யாவும் கைவரப் பெற்றுள்ளார் பா.ரஞ்சித். ஆனால், அவருக்கு வரலாற்றையும் நேர்மையாக சொல்ல விருப்பமில்லை! அரசியலையும் நேர்மையாக அணுகத் துணிவில்லை என்பதைத் தான் சார்பட்டா பரம்பரை சொல்கிறது. தலித் மக்கள் ஒடுக்கப்பட்டதை, அடக்குமுறைக்கு ஆளானதை, அவர்களின் தாங்கொணாத வலியை பேசுவதற்கு இன்னும் ஒரு நேர்மையான படைப்பாளி தமிழ் சினிமாவிற்கு வரவில்லை…என்றே தோன்றுகிறது! திரையின் காட்சிப் படிமங்களில் துல்லியமாக சொல்ல வேண்டிய உணர்ச்சிகளை கடத்த தெரிந்தவர் ரஞ்சித் . அதிலும், ...

இப்படிப்பட்ட கோணத்தில் ஒரு கட்டுரை எழுதுவதற்கு உள்ளபடியே எனக்கு விருப்பம் இல்லை! ஆனால்,இப்படியான விமர்சனங்கள் பரவலாக எழுந்து வந்த பிறகு அமைதியாக இருப்பது சரியாகாது தெளிவுபடுத்த வேண்டும் என்றே எழுதுகிறேன். ஒரு பொதுத்தளத்தில் சமூகநீதி, சமத்துவத்திற்கான கட்சி என்று அடையாளப்பட்டிருக்கும் ஒரு கட்சியின் பதவி,பொறுப்புகளில் உள்ளவர்களை சாதியக் கண்ணோட்டத்தில் அணுகுவதும்,மதிப்பிடுவதும் கேடான விளைவுகளைத் தரும் என்று நான் அஞ்சுகிறேன். சமீபத்திய திமுக உள்கட்சி தலைமை பதவிகளான பொதுச் செயலாளார்,பொருளாளர் பதவிகளில் ஒன்றை அக்கட்சியின் ஆகச் சிறந்த ஆளுமையாக கருத்தப்படும் ஆ.ராசாவிற்கு வழங்கப்படாதற்கு அவர் தலித் ...