காலமாற்றங்கள் சில அரசியல் அணுகுமுறைகளை மறுபரிசீலனை செய்ய வைக்கும்! தன் அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகாமல் திமுகவு இந்து மதம்,கோவில்கள், பக்தி தொடர்பான தன் கடந்த காலத் தோற்றங்களை மாற்றிக் கொண்டு வருகிறது! பாஜகவும், ‘பெரியாரின் சமூக நீதிக் கொள்கையை மறுதலித்து, தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது’ என்ற யதார்த்தத்தை உணரத் தொடங்கியுள்ளது..! இந்த மாற்றங்கள் எப்படி சாத்தியமாயின..? சட்டப்பேரவையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட  சமூக நீதி தினத்திற்கான அறிவிப்பு அசத்தலானது. துணிச்சலானது. ஏனென்றால்,பெரியாரை ஜென்மப் பகையாகக் கருதும் ஒரு ஆட்சி வலிமையாக மத்தியில் ...

நமது ஒன்றிய அரசின் அறிக்கை மற்றும் விளம்பரங்களில் தற்போதைய இந்தியாவின் சுதந்திர தினம் 75 என குறிப்பிட்டு கொண்டாடப்படுகிறது! பாஜகவும் இந்த சுதந்திர தினத்தை 75 வது சுதந்திர தின ஆண்டாகத் தான் கொண்டாடுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 75 வது ஆண்டை குறிப்பிடும் விதமாக ஒரு லோகோவும் வெளியிட்டு 75 இடங்களில் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்! உலகத்தில் யாருக்கும் இல்லாத தேசப்பற்று தங்களுக்குத் தான் இருக்கிறது என பறைசாற்றிக் கொள்ளும் பாஜக இப்படி சுதந்திர தினத்தை தப்புத் தப்பாக கணக்கிட்டு கொண்டாடுவதை ...

இயற்கை தான் நம்மை வாழ்விக்கிறது! அந்த இயற்கைக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்..? சுற்றிலுமுள்ள இயற்கையை தெரிந்தும், தெரியாமலோ  அழித்து கொண்டே  இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன..?  புதிய கிருமிகளின் தாக்கங்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் தொடர்பு உண்டா..? இயற்கையை பாதுகாக்க நமக்கான பொறுப்புகளை உணரவும், உயிரினங்கள், மரங்கள்  சூழ இருப்பதால் நமக்கு ஏற்படும் நன்மைகளை அறியவும்  விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாள் தான்  ஜூன் 5.  உலக சுற்றுச்சூழல் தினம்! நம்முடைய எந்த செயலும் அடுத்தவரை பாதிக்க கூடாது என்பது போல் அந்த செயல் இயற்கையையும் பாதிக்க ...