உண்மைகளை நீண்ட காலம் உறங்க வைக்க முடியாது! அதிகார பலத்தால் பொய்களை நிலைத்திருக்கச் செய்யவும் முடியாது என்பது மீண்டும் ரபேல் விமான ஊழல்கள் பிரான்சில் தோண்டி எடுக்கபடுவதில் இருந்து உணரமுடிகிறது. ஜீலை 2 ல் பிரான்ஸ் அரசு ஒரு நீதி விசாரணையை தொடங்கியுள்ளது. மோடி அரசின் முகத் திரையை கிழிக்கும் இந்த ஊழல் விவகாரத்தை மீடியாக்கள் ஏன் பேச தயங்குகின்றன,,? சர்சைக்குள்ளான 5,85,000 கோடி ரூபாய் ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், பணப் பரிவர்த்தனை, சாதகமாக நடந்து கொள்ளுதல் போன்ற ...