கள்ளக் குறிச்சி மாணவியின் மரணத்தை அரசு நிர்வாகம் கையாண்ட விதம் தான் அந்தப் பகுதியை இன்று கலவர பூமியாக மாற்றியுள்ளது. செல்வாக்கான நிர்வாகத்திற்கு சார்பாக அரசு நிர்வாகம் இருக்கிறது என்ற தோற்றம் நாளுக்கு நாள் வலுத்த நிலையில் நான்காவது நாள் அது தீவிரம் பெற்று வன்முறை வடிவம் கண்டுவிட்டது. அந்தப் பள்ளியை நடத்துபவர் பாஜகவில் செல்வாக்கு மிக்கவர் என்று சொல்லப்படுகிறது. அதனால், தமிழக அரசுக்கு ஏதேனும் அரசியல் அழுத்தம் தரப்பட்டு இருக்குமா? என்பது தெரியவில்லை. ஆனால், பொதுவாகவே இது போன்ற பிரச்சினைகளில் சக்தி வாய்ந்த ...
இந்தியா முழுமையிலும் தஞ்சை மாணவி மரணம் ஒரு விவாத பொருளாகியுள்ளது. மதமாற்ற நிர்பந்தம் நடந்துள்ளதா? அல்லது தனிப்பட்ட டார்ச்சர் எனும் மனித உரிமை மீறலா ? பொய்யைப் பரப்பி பாஜக தூண்டுகிறதா..? உண்மையில் நடந்தவை என்ன? அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் முருகானந்தம் (47). இவரின் முதல் மனைவி கனிமொழியின் மகள் லாவண்யா (17) தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தூய இருதய மேல் நிலை பாடசாலை என்ற உண்டு உறைவிட பள்ளியில் படித்து வந்தார். அவர் தங்கியிருந்த ஹாஸ்டலின் நிர்வாகி ...
ஜனவரி 3 ஆம் தேதி முதல் அதிரடியாக பள்ளிக் குழந்தைகளுக்கு (15 -18) தடுப்பூசி படுவேகமாக செலுத்தப்பட்டு வருகிறது. இதில் ஐந்து பள்ளிக் குழந்தைகள் இறந்ததாக அவர்களின் பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்துள்ளனர். குழந்தைகளை கொரோனா மிகக் குறைவாகவே தொற்றுகிறது. அப்படியே தொற்றினாலும் மரண பாதிப்பு இல்லை. ஆகவே தேவையில்லை என உலக மருத்துவ நிபுணர்கள் பலர் சொல்லியும் கேளாமல் வலுக்கட்டாயமாக தடுப்பூசி பள்ளிகளில் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கி போடப்படுகிறது! இது குறித்து மூன்று நாட்கள் முன்பு ...
இது லாகப் டெத் கூட இல்லை! நடு ரோட்டுச் சாவு அல்லது கொலை. சாத்தான்குளத்தில் ஒலித்த சாவு மணி ஏத்தாபூரில் ஏகத்திற்கும் தொடர்கிறது என்பது மட்டுமல்ல, இன்னும் அது தொடர்ந்து கொண்டே செல்வதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம்! இப்படி நிதானமின்றி நடந்தால் அதிகபட்சம் தற்காலிக பணி நீக்கம் தானே..பார்த்துக் கொள்ளலாம்! நான் போலீஸ், ஆகவே, நான் யாரையும் அடிக்க,உதைக்க உரிமையுள்ளவன். கொன்றாலும் நான் கொலைகாரனாக கருதப்பட்டு தண்டிக்கபடமாட்டேன் என்ற எண்ணம் காவலர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது போலும்! ஒவ்வொரு நாளும் ஏதேனும் சில இடங்களில் ...
காந்தியைப் பற்றிய நேரடியான அவரது அனுபவங்களை கேட்க மாத்திரமல்ல, காந்தியின் கடைசி நிமிடங்களை அறிந்து கொள்ளும் ஆவலில் கல்யாணத்தை சந்திக்க விரும்பினேன். நான் பத்திரிகையாளன் என்றதும், ”என்னை பேட்டி எடுத்தால் கட்டணம் தர வேண்டும்’’ என்றார். ஒத்துக் கொண்டதால் தான் அப்பாயிண்மெண்ட் தந்தார். நண்பர் பீட்டர் துரைராஜ் அவர்களையும் அழைத்துக் கொண்டு, பாரதிதாசன் சாலையில் எஸ்.ஐ.வி.இ.டி கல்லூரி எதிரில் உள்ள அப்பார்ட்மெண்டில் அவரை சந்தித்தேன். ’’நான் எந்த பத்திரிகை சார்பாகவும் அவரை பேட்டி எடுக்கவில்லை! காந்தியுடனான அவரது அனுபவங்களை நேரடியாக கேட்கும் தனிப்பட்ட ஆவலுக்காக ...
இது கொரானா தடுப்பூசிக்கு எதிரான பதிவல்ல. அவரவர்கள் தங்கள் சொந்த பட்டறிவையும், பகுத்தறிவையும் சார்ந்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்! ஆனால்,சில நிதர்சனங்களை புறம் தள்ளாதீர்கள் என சொல்வதற்காகவே இதை எழுதுகிறேன். கே.வி.ஆனந்த் மிக சமீபத்தில் தான் கொரானா தடுப்பூசி முதல் டோஸ் போட்டார்! அது போடும் வரை உற்சாகமாக இருந்தவர் போட்ட பிறகு உடல் நலன் குன்றியுள்ளார். இதற்கு முன்பில்லாத வகையில் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமமும், நெஞ்சுவலியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனை சென்று சோதித்ததில் அவருக்கு கொரானா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ரத்த உறைதல் ஏற்பட்டதா..? எனத் தெரியவில்லை. ...