நடைபெற்றுவரும்,போர்க்களக் கொடூர காட்சிகளில் பற்றி எரியும் கட்டிடங்கள், சிதறிக் கிடக்கும் மனித உடல்களை பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது! இவற்றை உலகம் முழுவதும் வாழும் மக்கள் பதற்றத்துடனும், சொல்லொண்ணா வேதனையுடனும் பார்த்துக் கொண்டுள்ளனர்! தற்போது ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் வசிக்கும் மக்கள் ரத்தமும், சதையுமாக ஒன்றுபட்ட சோவியத் யூனியனில் ஒன்றாக வாழ்ந்து வந்த சகோதரர்கள். இன்றைக்கு ஒருவரை ஒருவர் தாக்கி மாபெரும் அழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். சோவியத் யூனியனில் ஓர் அங்கமாக இருந்து பின்னர், பொதுவான புரிதலுடன் பிரிந்து போன 15 நாடுகளில் ஒன்றுதான் உக்ரைன். ...
சமீபத்தில் ஒரே வாரத்தில் சென்னையை ஒட்டி மூன்று இளைஞர்கள் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும்பொழுது இறந்தனர். நெஞ்சை பதறவைக்கும் இந்த மரணங்களை நம்மால் ஏன் தடுக்க முடியவில்லை…? ஜனவரி 15-ல் கதிரவன் ஈஞ்சம்பாக்கத்தில் இறந்துள்ளார். ஜனவரி 19-ல் ராஜேஷ், ஏழுமலை இருவரும் தாம்பரம் வரதராஜபுரத்தில் இறந்துள்ளனர். இந்த மூவருக்கும் 4 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் 30 சுத்திகரிப்பு தொழிலாளிகள் இதுபோல் இறந்துள்ளனர். ஒரு வேலையில் ஈடுபட்டு இருக்கும்பொழுது இறந்து உள்ளனர் ...
அடுத்தடுத்து தினமணியின் இளம் பத்திரிகையாளர்கள் பகீர் மரணம் அடைகின்றனர். இது விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி ரகம்! இந்த மரணங்களுக்கான பின்னணியில் மர்மப் புன்னகை சிந்துகிறார் அதன் ஆசிரியராக அறியப்படும் வைத்தியநாதன்! இலக்கிய மேடைகளிலும், பொது நிகழ்வுகளிலும் பெரிய மனிதராக தோற்றம் காட்டி, தமிழ்த் தாயின் தவப்புதல்வன் போல தன்னைத் தானே அடையாளப்படுத்தி திரியும் வைத்தியநாதனுக்கு இவ்வளவு ஆபத்தான இன்னொரு முகம் இருக்குமா..? அறிவுத் தளத்தில் அராஜக எஜமானத்துவத்துடன் ஒருவரால் எப்படி இயங்க முடிகிறது என்பது வியப்பளிக்கிறது! தமிழ்நாட்டில் தினமணி நாளிதழுக்கென்று தனி மரியாதை ...
தினசரி துப்பாக்கி சூடு, சுட்டுக் கொலை, போலீஸ் என்கவுண்டர் என்பதாக கடந்த 27 நாட்களில் காஷ்மீரில் 26 என்கவுன்டர்கள் நடந்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகளில் இறப்பது பெரும்பாலும் பதின்பருவத்து இளைஞர்களே என்பது வேதனை…! இது போன்ற செய்திகள் நம்மை காயப்படுத்துகிறது அல்லவா? இந்த மனித இழப்புகள் ஏன் இந்த நாட்டில் தொடர்கின்றன? அதுவும் காஷ்மீரில் கடந்த 30 ஆண்டுகளாக இவை தொடர்வது ஏன்? பிரச்சினையை தீர்த்தேவிட்டோம் ;இனி தீவிரவாதமும் , வன்முறையும் தலைதூக்காது என்று அமீத் ஷா ஆகஸ்ட் 5,2019ல் அறிவித்த பின்னரும் தொடர்வது மட்டுமல்ல, ...
நெஞ்சைப் பிளக்கும் கோர விபத்துக்கள் இல்லாத தீபாவளி என்பது கடந்த கால் நூற்றாண்டாக ஒரு நிறைவேறாத கனவாகவே தொடர்கிறது. எதைத் தவிர்த்தால்.., இந்த கோர விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் தவிர்க்க முடியும் என அலசுகிறது இந்தக் கட்டுரை! சடசடவென்ற வெடிச்சத்தங்கள், கண்ணைப் பறிக்கும் ஒளி வெள்ளம்.. இல்லாத தீபாவளியை நினைத்துக் கூட பார்க்கமுடியாத ஒரு நிலைக்கு சமூகம் வந்துவிட்டது. ஆனால், விபத்துகள், உயிரிழப்புகள் இல்லாத தீபாவளியை நம்மால் ஏன் சாத்தியப்படுத்த முடியவில்லை..? தீபாவளி பட்டாசுகளுக்கான விபத்துக்கள் மூன்று வகை! ஒன்று தயாரிக்கும் இடங்களில் நடக்கும் விபத்துகள்! ...
எப்போது தடுப்பூசி ஒரு பேரியக்கமாக தொடங்கப்பட்டதோ ..அப்போது முதல் கொரோனா இரண்டாம் அலையும் அதற்கேற்ப வீரியம் கொண்டு வருகிறது என்றால், தடுப்பூசிக்கும், கொரோனா பரவலுக்கும் என்ன தொடர்பு…? கட்டுப்படுத்த முடியாத கொரோனா பெருக்கத்திற்கு என்ன காரணம்..? இன்றைக்கு நம் அரசுகள் நோய் தீர்க்கவென்று நீர்பந்திக்கும் அணுகுமுறைகளே காரணம்! இந்த மருந்தை தான் உட்கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசியால் தான் நோய் தொற்றை தவிர்க்க முடியும் என அரசாங்கம் நமக்கு அடையாளம் காட்டி நிர்பந்திப்பதன் வழியாகத் தான் நோய் வீரியம் அடைகிறது என்ற குற்றச்சாட்டு பல ...
கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டையே ஆட்டம் காண வைத்துவிட்டது என்று பிரதமர் மோடியே வேதனைப்பட்டு சொல்லும் அளவுக்கு நிலைமை தற்போது மிக மோசமாக உள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியின் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விளைவாக கொத்துக்கொத்தாக மனித உயிர்கள் பலியாகி வருகின்றன. கொரோனா வின் இரண்டாவது அலை எவ்வளவு கொடூரமானது என்பதற்கு இந்தியா ஒரு உதாரணம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்து இந்நாட்டை பார்த்து மற்ற நாடுகள் எச்சரிக்கையாக இருங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது. உலக நாடுகள் அனைத்துமே இந்திய பயணிகள் ...
மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன..! ஆக்சிஜன் பற்றாகுறையாலும், ஆளுமை பற்றாகுறையாலும் கொத்து, கொத்தாக மரணங்கள்…! முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் செய்யாமல், மக்களின் உயிர்பாதுகாப்பை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு.., அயோத்தி, காசி, மதுரா..என்று ஒவ்வொரு அஜெண்டாவையும் அரங்கேற்றிச் செல்கிறது பாஜக அரசு..! இந்த ஓராண்டு கால அவகாசத்தில் பேரிடர் கால நிர்வாகத்திற்கான அனுபவத்தையோ, அறிவையோ ஏன் பெறவில்லை என்று பலர் கேட்கிறார்கள்! அதில் விருப்பமில்லாத அரசுக்கு எத்தனை ஆண்டு அவகாசம் தந்தாலும், எத்தனை பெருந்தொற்று வந்து எத்தனை பேர் மடிந்தாலும் அது எதையும் கற்காது! காலரா, ...