நானும் விவசாயி தான் என்று சீன் காட்டினால் சரியாகிடுமா? தமிழ் நாட்டில் விவசாயம் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்துத்துக் கொண்டுள்ளது! தமிழக விவசாயத்தின் யதார்த்ததை அணுவளவும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் முதல்வர் பழனிச்சாமி! ”விவசாய உற்பத்தி பொருள்களை வெளி நாட்டுக்கு அனுப்பி விவசாயிகள் லாபம் பார்க்க ஏற்பாடு பண்ணுவோம்’’ என்று பேசியுள்ளார்! கடந்த 13 ஆண்டுகளாக அரிசி விளைச்சல் அதள பாதாளத்திற்கு சென்று கொண்டுள்ளது! அண்டை மாநிலங்களுக்கெல்லாம் அன்ன தாதாவாக அரிசியை அனுப்பிக் கொண்டிருந்த தமிழகம் தற்போது தன் தேவைக்கே அண்டை மாநிலங்களை நம்பி ...