மருத்துவக் கல்வியையே மரணிக்க செய்து கொண்டுள்ளது பாஜக அரசு! காலதாமதமான நீட் தேர்வு, இன்னும் கவுன்சிலிங் நடத்த முடியாத நிலைமை! 83,000 எம்.பி.பி.எஸ் மாணவர்களும், 45,000 பி.ஜி மாணவர்களும் கல்லூரிக்குள் கால் வைக்க முடியாத அவலம்! ஏன் இந்த நிலைமை? நீட் எக்ஸாம் குளறுபடிகளால் நாளும்,பொழுதும் பாதிக்கப்படும் மாணவர்கள் கோர்ட் வாசலை மிதித்த வண்ணம் உள்ளனர் என்றால், மாநில அரசுகள் நடத்தி வந்த மருத்துவ தேர்வுகளை மத்திய அரசு தான் நடத்த முடியும் என்பதாக மையப்படுத்திவிட்டதால் நீட் எக்ஸாமே குறிப்பிட்ட காலத்தில் நடத்த முடியாமல் ...

க. நாகராஜன், அருப்புக் கோட்டை நீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை இன்னும் குடியரசுத் தலைவருக்கே அனுப்படவில்லையாமே? செப்டம்பர் 20 ஆம் தேதி நீட் தேர்வு தொடர்பான அந்த அறிக்கை குடியரசுத் தலைவருக்கு அனுப்பட்டதாக நம்பி நாம் காத்துக் கிடக்கிறோம். அது, இன்னும் தமிழக ராஜ்பவன் டேபிளில் இருந்து கூட நகரவில்லை என்பதும், அதைக் குடியரசு தலைவருக்கு அனுப்ப கோரி முதல்வர் கவர்னரை தற்போது சந்தித்து வேண்டியுள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன! பல கோடி மக்களின் விருப்பம், அவர்களின் வாழ்வை பாதிக்கும் அம்சம்…எப்படி ...

எதற்கு ஒரு மாத இடைவெளி..தேர்தல் தீர்ப்பைச் சொல்ல? ஒன்றிரண்டு நாளில் எண்ணிச் சொல்ல வேண்டிய தீர்ப்புகளை ஒரு மாதம் நிறுத்தி வைக்கும் அதிகாரத்தை என்னென்பது? தமிழ் நாட்டில் ஏறத்தாழ எல்லோர் மனமும் பதைபதைப்போடு தான் உள்ளது. எந்த நேரம் என்ன நடக்குமோ..? தீர்ப்புகள் திருத்தப்படுமா…? வாக்குமெஷின்களில் கோல்மால் செய்துவிடுவார்களோ..? ”சார் வெளியில் இருந்து கொண்டு ரீமோட் மூலம் கூட தேர்தல் தீர்ப்பை மாற்றலாம் தெரியுமா?’’ என்று குண்டை தூக்கிப் போட்டார் ஒரு பத்திரிகையாளர். சுப்பிரமணிய சுவாமியே சொன்னார். ஓட்டுமெஷினில் எவ்வளவு கோல்மால் செய்யமுடியும் என்று!  ...