ஸ்டாலின் டெல்லி விசிட் பல கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் வித்திட்டு கூட்டணிக் கட்சிகளையும், மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சந்தர்ப்பவாதம், சரண்டரின் தொடக்கம், காங்கிரசிடமிருந்து விலகல்.. ஆகிய விமர்சனங்கள் வேகம் எடுத்துள்ளன! நாம் இதை எப்படி புரிந்து கொள்வது? டெல்லியில் ஏற்கனவே தமிழக அரசின் விருந்தினர் மாளிகை உள்ளது. திமுகவிற்கு என்று பாராளுமன்ற வளாகத்திலேயே அலுவலகமும் உள்ளது. இந்த புதிய அலுவலகமானது காங்கிரஸ் காலத்திலேயே ஏழு எம்.பிக்களை பெற்றுள்ள எந்த ஒரு கட்சிக்கும் டெல்லியில் அலுவலகம் கட்டிக் கொள்ள அன்றைய மத்திய அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் தற்போது ...
டெல்லியில் 143 வது நாளாகப் தொடரும் விவசாயிகள் போராட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திட வேண்டும் என்று மத்திய அரசு பலவித கெடுபிடிகளை செய்கிறது! இது வரை போராட்டத்தில், 375க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ள போதிலும், மனம் தளராமல் தொடர்கின்றனர். கொரோனாவை விட விவசாய சட்டங்கள் ஆபத்தானவை என்பது விவசாயிகளின் நிலைபாடு! போராடும் விவசாயிகளை கொரானாவை விட ஆபத்தாக பார்க்கிறது பாஜக அரசு! நடக்கப் போவது என்ன..? விவசாயிகள் போராடி வரும் இடத்திற்கு அருகாமையில் உள்ள மக்களில் சிலரை விவசாயிகளுக்கு எதிராக தூண்டிவிட்டது அரசாங்கம். ஆனால் ...