இந்திய வரலாறு முன்பின் காணாத வகையில் விவசாயிகள் போராட்டம் தலை நகர் டெல்லியை உலுக்கிக் கொண்டுள்ளது! எந்த அரசியல் கட்சியையும் தங்கள் போராட்ட மேடையில் அனுமதிக்காமல் விவசாயிகள் என்ற ஒற்றை அடையாளத்துடன் போராடி வருகின்றனர். கட்சி, சாதி, மதம், இனம், பணம், அந்தஸ்து, கெளரவம் என எதுவும் அவர்களை பிரிக்கவில்லை! குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக மதத்தின் பெயரால் மக்களை பிரித்து, ஆட்சி அதிகாரத்தை அடைந்த பாஜகவிற்கு விவசாயிகள் எந்த அடையாளங்களையும் பொருட்படுத்தாமல் ஒன்றுபட்டுள்ளது பேரதிர்ச்சியை தந்துள்ளது. அதனால்,பாஜகவும் அவர்களின் ஆதரவாளர்களும் இந்தப் போராட்டத்தை ...