வெறும் சம்பிரதாயத்திற்காக, ஒரு சடங்கை நிறைவேற்றுவது போல, நாங்களும் சட்டமன்றத்தில் ஜனநாயக பூர்வமாக எதிர்கட்சியோடு விவாதித்து மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து தான் செயல்படுகிறோம் என்று காட்டிக் கொள்வதற்காக மூன்று நாட்கள் கலைவாணர் அரங்கத்தில் கூடவுள்ளது சட்டமன்றம்! இதில் முதல் நாள் இறந்த சட்டமன்ற உறுப்பினர்கள்,தலைவர்களுக்கான இரங்கல் நிகழ்வில் போய்விடும்! அடுத்த இரண்டு நாட்களில் ஏராளமான சட்ட மசோதாக்கள் அவசர கதியில் அறிவிக்கப்பட்டு விவாதமின்றி நிறைவேறவுள்ளது. முக்கியமாக எட்டுமாதத்திற்கான துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் என்னென்ன விடுபட்டுள்ளது,எவற்றை கூடுதல் கவனப்படுத்த வேண்டும் என்றெல்லாம் ...