காவல்துறை என்பது ஜனநாயகம் மறுக்கப்பட்டதாகவே கட்டமைக்கப்பட்டு உள்ளது! இந்தியாவிற்கு கிடைத்த சுதந்திரம் இன்னும் இங்கு காவல்துறைக்கு வரவில்லை. நிலப் பிரபுத்துவ பண்ணைச் சமூக மனநிலையில் உழலும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆயிரக்கணக்கான காவலர்களை ஆர்டர்லியாக வீட்டு வேலைக்கு வைத்துள்ளனர்! சுமார் 45,000 ரூபாய் அளவுக்கு சம்பளம் பெற்று வரும் காவலர்கள் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ள தருணத்திலும் கூட மக்கள் பணி செய்ய முடியாமல் உயர் அதிகாரிகள் வீட்டில் தோட்டப் பணிகள், வீட்டு வேலைகள், காய்கறிகள், மளிகை சாமான்கள் வாங்குவது, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டு ...