பாடப் புத்தகங்களில் உள்ள மிக முக்கிய தலைவர்கள், தமிழின் ஆளுமைகளை சாதி பின்னொட்டுடன் குறிப்பிட்ட வழக்கம் பல காலமாகவே தொடர்ந்துள்ளது. பெயருக்கு பின்னால் உள்ள சாதி பின்னொட்டை தூக்கி எறியும் செயலை சுதந்திர போராட்ட காலத்திலேயே பெரியார் செய்துவிட்டார். அவரைப் போலவே பல்வேறு தலைவர்களும் செய்தனர். சுதந்திர போராட்ட காலத்திலும், திராவிட மறுமலர்ச்சி தோன்றி பெருவெள்ளமென பாய்ந்த காலகட்டத்திலும் சாதி அடையாளத் துறப்பு இயல்பாகவே நடந்தேறியது. பொதுவுடமை சித்தாந்த இயக்கங்களிலும், தொழிலாளர் வர்க்க இயக்கங்களிலும் சாதி அடையாளத் துறப்பு மிக இயல்பாக இருந்ததை கண் ...

பகுதி-3 காட்டுயிர்களுக்கான  இரையைக் காடுகளே வழங்கிவிடுகிறது. பல்லாயிரம் வருடமாக தொடர்ந்த இந்த நிலையை மிகச் சமீபத்தில் நாம் மாற்றிவிட்டோம். நகரவாசிகள் மலையில் இடம் வாங்கி வாழையை பயிரிட்டனர்.ஆனால் அது யானைகள் நடமாடும் இடம் .அவற்றுக்குப்  பசித்தால் இருப்பதை சாப்பிடுவது இயல்பு தானே! இதை ஏற்காமல் யானை தவறு செய்ததாக, ’’எங்கள் நிலத்தில் யானை புகுந்தது, அட்டகாசம் செய்கிறது’’ என்று நாம் பேசத் தொடங்கி இன்று அனைவரின் மனதிலும், ’’யானை தான் ஏதோ தவறு செய்கிறது’’ என்று தோற்றத்தையும் உருவாக்கிவிட்டோம். தொடர்ந்து பத்திரிகையிலும் இப்படியே செய்திகள் வருகின்றன. ...