அடக்குமுறைச் சட்டங்கள், மக்களை பிரித்தாளும் தந்திரங்கள், அதிகார துஷ்பிரயோகங்கள்..! இது தான் இன்றைய பாஜக அரசு! மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பயங்கவாத முத்திரை! தேச விரோத குற்றச்சாட்டுகள்..! சமீபகாலமாக உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி, மனித நேயத்தை காட்டி வருவதற்கு இந்த தீர்ப்பையும் உதாரணமாக சொல்லலாம்..! நடாஷா நார்வல், தேவாங்கனா கலிதா,அசீப் இக்பால் தன்ஹா என்ற மூன்று மாணவ மணிகளுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி உயர்நீதி மன்றம் பிணை வழங்கியது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவிகளான ...