ரஜினிகாந்த் நிம்மதியா, ஆரோக்கியமாக வாழட்டும்! அரசியலில் ஈடுபட உடல் இடம் தரவில்லை என்பது உண்மை என்றாலும், அவரது உள்ளமும் அதற்கு இடம் தரவில்லை என்ற உண்மையை அவர் நீண்ட நெடுங்காலமாக மறைத்து வந்தார்! இப்போது அவர் உடல் நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வருவதில் இருந்து தன்னைவிடுவித்துக் கொண்டதாக அறிவித்திருக்கிறார்! இதை பத்தாண்டுகளுக்கு முன்பே மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்ட போதே அறிவித்திருக்கலாம்! அல்லது இரண்டாவது கிட்னி டேமேஜ் ஆகி மாற்று பொருத்தபட்ட போதாவது அறிவித்திருக்கலாம்! குழப்பம், அதிகார மயக்கம், பேசுபடு பொருளாக இருக்க வேண்டும் ...