நீரிழிவு, என்றழைக்கபடும் சர்க்கரை நோய் உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அதுவும் இந்தியாவில் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. தொற்றா நோயான இந்நோய் உயிரைப் பறிக்கும் அளவுக்கு மோசமானதா? அந்த அளவுக்கு சர்க்கரை நோய் கொடியதா? ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால் அது வாழ்நாள் முழுவதும் சம்பந்தப்பட்டவரை விட்டு விலகாது என்பதும், இது ஒரு பரம்பரை நோய் என்பதும் உண்மையா? இதுபற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்; சர்க்கரை வியாதி என்று சொல்வதைவிட அதை ஒரு குறைபாடு என்று சொல்வதே சரியாக இருக்குமென்று நினைக்கிறேன். பொதுவாக ...