தகுதியற்ற நபர்கள் பெரிய பதவிகளில் வந்து அமரும் போது தங்கள் மீது மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களை கட்டமைத்துக் கொள்வதில் தான் கண்ணும், கருத்துமாக இருப்பார்கள். அவர்களிடம் எப்போதும் ஒரு இன்செக்யூரிட்டி பீலிங் ஓடிக் கொண்டே இருக்கும். அதை மறைத்துக் கொள்ளவே அதிக கெத்து காட்டுவார்கள்..! அந்த வகையில் அனுதினமும் வளைய வந்து கொண்டிருப்பவரே தினமணி வைத்தியநாதன்! திறமையான இளைஞர்களை தீர்த்துக்கட்டி, வெளியனுப்பு; தினமணி என்றாலே கார்ட்டூனிஸ்ட் மதி தான் அனைவர் நினைவுக்கும் வருவர். தனக்கு மிஞ்சி மதிக்கு பேர் வருவதாக கருதிய வைத்தியநாதன் ”ஒன்று நான் ...
அடுத்தடுத்து தினமணியின் இளம் பத்திரிகையாளர்கள் பகீர் மரணம் அடைகின்றனர். இது விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி ரகம்! இந்த மரணங்களுக்கான பின்னணியில் மர்மப் புன்னகை சிந்துகிறார் அதன் ஆசிரியராக அறியப்படும் வைத்தியநாதன்! இலக்கிய மேடைகளிலும், பொது நிகழ்வுகளிலும் பெரிய மனிதராக தோற்றம் காட்டி, தமிழ்த் தாயின் தவப்புதல்வன் போல தன்னைத் தானே அடையாளப்படுத்தி திரியும் வைத்தியநாதனுக்கு இவ்வளவு ஆபத்தான இன்னொரு முகம் இருக்குமா..? அறிவுத் தளத்தில் அராஜக எஜமானத்துவத்துடன் ஒருவரால் எப்படி இயங்க முடிகிறது என்பது வியப்பளிக்கிறது! தமிழ்நாட்டில் தினமணி நாளிதழுக்கென்று தனி மரியாதை ...
’’மனு தர்மம் என்பதெல்லாம் காலாவதியான விவகாரம்! தற்போது இந்திய அரசியல் சட்டப்படி தான் எல்லாம் நடக்கிறது! ஆகவே, புழக்கத்தில் இல்லாத மனு நூலைப் பற்றி பேசி வீண் சர்சைக்கு வித்திடுவதா?’’ என்று ஒரு பக்கம் வியாக்கியானம் தந்துவிட்டு, மறுபுறம் மானுட தர்மத்திற்கு எதிரான மனு தர்மத்தை புகழ்ந்தும், நியாயப்படுத்தியும் தினமணியில் நடுப்பக்க கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன். ’மனு தர்மமும், ஹிந்துமதமும்’ ’மனு ஸ்மிருதியில் பெண்கள்’ ஆகிய கட்டுரைகள் சமீபத்தில் வெளியாகின! அதாவது சூத்திரர்களைக் கொண்டே சூத்திரர்களை இழிவுபடுத்தும் நூலை ...