மிகக் கூர்மையான அரசியல் விமர்சகர், சமூக ஆய்வாளர், சமரசமற்ற பத்திரிகையாளர் என்பதே கவிதாசரணின் அடையாளம்! இன்றைக்குள்ள தொலைக் காட்சி ஊடகங்கள் எதுவும் இந்த நேர்மையான சிந்தனையாளரை, அறிஞரை அறிந்து நேர்காணல் செய்ததில்லை. வெகுஜன பத்திரிகைகள் அவரை பெரிதாக அடையாளப்படுத்தவில்லை. இயக்க சார்புகளற்ற சிந்தனையாளர்! மானுட விழுமியங்களை மனதில் கொண்டு இயங்கியவர், அடிநிலை மக்களை அரவணைப்பதே ஆகச் சிறந்த எழுத்துப் பணி என இயங்கியவர் கவிதாசரண்! யாருடைய அங்கீகாரத்திற்காகவும் வளைந்து கொடுக்காமல், பொது நலன் சார்ந்து சமரசமற்று இயங்குபவர்களை அடையாளம் கண்டுணரும் அருகதை இன்னும் தமிழ்ச் ...