மோடி – அமித்ஷா கூட்டணியின் மூர்க்கமான நகர்வுகளாக அவசர, அவசரமாக இரு சட்டங்கள்! எதற்கு? சி.பி.ஐ அமைப்பை சிதைக்கவும், அமலாக்கத் துறையை அடிமைத் துறையாக்கவும்! நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க சற்று முன்னதாக அவசர அவசரமாக மோடி-ஷா கூட்டணி இரண்டு அவசர சட்டங்களை நவம்பர் 13ந்தேதி பிறப்பித்துள்ளது. அமலாக்கப் பிரிவு இயக்குனர், சி பி ஐ  இயக்குனர் ஆகியோரின் பதவிக்காலம்  தற்போது இரண்டு ஆண்டுகள் என்று இருப்பதை ஒவ்வொரு வருடமாக நீட்டித்து பதவி தொடரச் செய்யவும்,  அப்படி ஐந்தாண்டுகள் வரை இத்தகைய பணி நீட்டிப்பு வழங்கவுமான ...

அதிர்ச்சியில் இருந்து மீள சில மணி நேரங்கள் ஆனது! ஒளிப்பதிவில் கவிதை பாடியவன்! அவன் ஒளிப்பதிவில் காட்சிகளை காண்கையிலேயே கவிதை அனுபவத்தை பெறலாம்! பிரேம் பை பிரேம் கவிதை தான்! இன்றைக்குள்ள இயக்குனர்களில் அதிக வாசிப்பு பழக்கம் உள்ளவர். 1988 தொடங்கி 33 ஆண்டுகள் ஒரே சீரான நட்பை இருவரும் பராமரித்தோம்! போட்டோ ஜர்னலிசம் தான் எங்கள் இருவரையும் இணைத்தது.ரொம்பவும் எனர்ஜடிக் மனிதன்.தான் இருக்கும் இடத்தை உற்சாகமாவும்,உயிர்ப்பாகவும் வைத்திருக்கும் கலை அறிந்தவன்! அசைட் பத்திரிகை மூலம் தான் எங்கள் நட்பு உருவானது! அப்போது தான் ...