சமரசமற்ற ஒளிப்பதிவு மேதை, திரைக்கதையோட்டத்திற்கு அன்னியமாக ஒரு போதும் திசைமாறாத கேமரா அவருடையது! கதைக்கான மைண்ட் செட்டப்போடு, ஆத்மார்த்தமாக ஒளிப்பதிவு செய்பவர் என்ற வகையில் ஒரு இயக்குனரின் எண்ணத்தை காட்சி வடிவில் கொண்டு வந்து நிறுத்துவதில் தன்னிகரற்றவர்! அந்த வகையில் பாரதிராஜாவின் முதல் ஐந்து படங்களின் வெற்றியில் கேமரா நிபுணர் நிவாஸிற்கும் கணிசமான பங்கிருந்தது! என் பள்ளிக்காலம். ஏதோ ஒரு வார இதழில் கமலஹாசனிடம் இப்படி ஒரு கேள்வி : ‘ பாலுமகேந்திரா, அசோக்குமார், நிவாஸ். மூன்று ஒளிப்பதிவாளர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?” பாலுமகேந்திரா, அசோக்குமார் குறித்து தன் கருத்தை சொன்ன கமல், நிவாஸ் குறித்து, ‘’நோ கமெண்ட்ஸ்’’ என்று பதில் சொல்லியிருந்தார். ...