”விவாதிக்க வேண்டுமா..? – முடியாது!” ”பேச வேண்டுமா – அனுமதி கிடையாது!” ”இவை அநீதியான சட்டங்கள் மக்கள் பாதிக்கப்படுவார்களே” ”நீங்கள் பேசிய எதுவும் சபை குறிப்பில் இடம் பெறாது..” ”நாங்க பேசும் எதையும் காதில் வாங்க மாட்டீர்களா..? அப்ப எதுக்கு சபை?” ”உட்காருங்க, நீங்க சபை விதிகளை மீறுகிறீர்கள்!” ”மக்கள் விரோத சட்டங்களை தனி நபர்கள் ஆதாயத்திற்காக கொண்டு வருகிறீர்கள்! பிரதமரும், உள் துறை அமைச்சரும் ஏன் சபைக்கு வரவில்லை.’அவர்கள் வந்து பதில் சொல்ல வேண்டும்.” ”கூச்சல் போட்டு சபையின் புனிதத்தை கெடுக்கிறீர்கள்..! தற்போது ...