இப்படி எல்லாம் கூட நடக்க முடியுமா? நம்பவே முடியவில்லை. தேச ஒருமைபாட்டுக்கு எதிராக சிக்கலை, தேவையில்லாத பிரச்சினைகளை ஒரு அரசே வலிந்து உருவாக்கலாமா? குடியரசு தின அணிவகுப்பில் அனைத்து மாநிலங்களின் சார்பிலும் தலா இரு ஊர்திகளோ அல்லது ஒன்றோ அணிவகுத்து வந்தால் தில்லி சாலைகள் திணறிவிடுமா? இந்தியாவில் இருப்பதே 28 மாநிலங்கள் 9 யூனியன் பிரதேசங்கள் தானே! மொத்தம் 225 ஊர்திகள் இடம் பெறும் அணி வகுப்பில் 16 மாநிலங்களுக்கு மட்டும் வாய்ப்பு என்பது சிறுபிள்ளைத் தனமில்லையா? நாம் எல்லோரும் இந்தியர்கள் என்பதை உணர்வுபூர்வமாக ...