நடைபெற்றுவரும்,போர்க்களக் கொடூர காட்சிகளில் பற்றி எரியும் கட்டிடங்கள், சிதறிக் கிடக்கும் மனித உடல்களை பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது! இவற்றை உலகம் முழுவதும் வாழும் மக்கள் பதற்றத்துடனும், சொல்லொண்ணா வேதனையுடனும் பார்த்துக் கொண்டுள்ளனர்! தற்போது ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் வசிக்கும் மக்கள் ரத்தமும், சதையுமாக ஒன்றுபட்ட சோவியத் யூனியனில் ஒன்றாக வாழ்ந்து வந்த சகோதரர்கள். இன்றைக்கு ஒருவரை ஒருவர் தாக்கி மாபெரும் அழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். சோவியத் யூனியனில் ஓர் அங்கமாக இருந்து பின்னர், பொதுவான புரிதலுடன் பிரிந்து போன 15 நாடுகளில் ஒன்றுதான் உக்ரைன். ...