அடேங்கப்பா.. ஆடிய ஆட்டமென்ன..? பேசிய பேச்சுக்கள் என்ன…? கட்டமைத்த பிம்பங்கள் என்ன…? எல்லாவற்றுக்கும் மக்கள் தீர்ப்பு தந்துவிட்டார்கள்! தன் சுயபலத்தை உணராத இந்த சூனியத் தலைமைகள் ஏதோ தமிழகத்தின் எதிர்காலத்தையே தாங்கள் தான் தீர்மானிப்பவர்கள் போல – வெற்றி தோல்விகளே இவர்களிடம் விலாசம் வாங்கித் தான் பயணிக்கும் என்பது போல – அளந்துவிட்டார்கள்! அதுவும் இந்த தேமுதிக காட்டிய திமிர் இருக்கே..! அப்பா, யப்பா அப்பப்பா…! ஆனானப்பட்ட கேப்டனே ஆப் ஆயிட்டாரு எனும் போது இந்த அல்லகைகள் அமைதி காத்து அடக்கமாக இருந்திருந்தால் கூட, ...
அரசியலில் எந்த ஒரு கட்சியும் தோன்றுவதற்கும், நிலைப்பதற்கும் நிச்சயமாக ஒரு எதிரி தேவை! எதிரியை அடையாளப்படுத்தாதவர்கள், தங்கள் அடையாளத்தை இழந்து அழிந்துவிடுவார்கள்! இருதுருவ அரசியலின் ஈர்ப்பே உலகை இயக்கிக் கொண்டுள்ளது! அமெரிக்காவில் குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் அடிப்படைத் தன்மையில் வேறுபட்டவை! ஜனநாயகக் கட்சி பன்மைத்துவ தன்மை கொண்டது. கறுப்பர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்டவர்களை அரவணைத்து செல்லும் கட்சியாக உள்ளது! குடியரசுக் கட்சி வெள்ளையின மக்களின் உயர்வு, தாழ்வு கொள்கையை உள்வாங்கிய கட்சியாகும்! ஜார்ஜ்புஷ், ரொனால்டு டிரம்ப் ஒரு எக்ஸ்டீரிம் என்றால் ஒபாமாவும், ஜோபைடனும் அதற்கு ...
தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் உள்ள ஒரு கட்சிக்குத் தான் எத்தனை தெனாவட்டு..? ஒன்னும் இல்லாமலே எப்படி கெத்துகாட்டுவது என்பதற்கு இன்று தேமுதிகவை மிஞ்ச நாட்டில் வேறு கட்சி இல்லை! காலி பெருங்காய டப்பா எப்படியும் கொஞ்ச நாளைக்கு வாசனை வீசிக்கிட்டுத் தான் இருக்கும்! ஆனால், சமையலுக்கு பயன்படாது! அது போலத்தான் தேமுதிக! இது ஒரு வேத்துவேட்டு! வெடிக்கிறது மாதிரி சின்ன தீப்பொறி வந்துட்டு தானா அணைந்துவிடும்..! ”234 தொகுதிகளிலும் எங்கள் வேட்பாளர்களை நிறுத்துவோம். எங்க தயவில்லாமல் யாராலும் தமிழ் நாட்டில் ஆட்சி அமைக்க ...
‘மூட நம்பிக்கைகளின் முழு வடிவம், குடும்ப ஆதிக்கம், குழப்பம், கோமாளித்தனம்..ஆகியவற்றின் மொத்தக் கலவையாக இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது’ என 2005 ஆம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்ட போது நான் எழுதினேன்! ஏனென்றால்,குனியமுத்தூர் சோதிடர் பாலசுப்பிரமணியம் தேதி குறித்துக் கொடுக்க, தன்னுடைய ஆன்மீக குரு சக்திபாபாஜியை சாட்சியாக வைத்துக் கொண்டு தான் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தார்! அவர் ராசி எண் ஐந்து என்பதால் கட்சி ஆரம்பித்த நேரம்,கட்சிக் கொடியின் உயரம்,அப்போது பறக்கவிட்ட பறவைகளின் எண்ணிக்கை..என அனைத்தும் ஐந்தாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார்! ஒன்றுக்கொன்று முரண்பாடான தேசியம்,திராவிடம் ...