ஒரே நாடு, ஒரே மதம் என்ற கோட்பாட்டில் பாஜக அரசு தற்போது ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வு என்ற கருத்தியலில் தேசம் முழுமைக்குமான CUET எனப்படும் பொது நுழைவுத் தேர்வை கொண்டு வரவுள்ளது. இதன் மூலம் இனி 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் மேல்படிப்பை தொடர CUET எழுதியே ஆக வேண்டும்! அதாவது நீட்டைப் போல இது ஒரு கியூட்! இதுவும் என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளார்கள். நீட்டை எதிர்ப்பதைவிட நூறு மடங்கு அதிகமாக எதிர்க்க ...

பொங்கல் தொகுப்பான 21 வகை உணவுப் பொருட்கள் விவகாரத்தில் இவ்வளவு கெட்ட பெயர்கள் ஏற்படுவதற்கு என்ன காரணம்? மூன்று துறைகள் சம்பந்தப்பட்ட செக்கிங் ஆபீசர்ஸ் விங் இருந்தும் தரக்குறைவு, எடை குறைவு, பற்றாகுறை ஆகியவை ஏற்பட்டதன் பின்னணி என்ன? ரேஷன் உணவு பொருட்கள் சப்ளை விவகாரத்தில் குற்றம், குறைகள் இருந்தால் அது எவ்வளவு சென்சிடிவ்வான விளைவுகளை உருவாக்கும். சேர்த்து வைத்த நல்ல பெயர் அனைத்தையும் நிமிடத்தில் தரைமட்டமாக்கிவிடும் என்பது தெரியாமல் இதில் சிலர் விளையாடியுள்ளனர். அதை தடுக்க நினைத்தும் முடியாமல் பலரும் கைகட்டி, வாய் ...

மு.கருப்பசாமி, அருப்பு கோட்டை, விருதுநகர் ”கோயில் சொத்துகளை அபகரித்து வைத்திருப்பவர்கள் அடுத்த பிறவியில் வவ்வால்,பெருச்சாளிகளாக பிறப்பார்கள்” என்கிறாரே மதுரை ஆதீனம்? அவர் வாக்கு பலிக்கப்பட்டும். அப்படியே பல ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு அதிபதிகளாக – கேட்பாரில்லாத சுகபோக வாழ்க்கையை – அனுபவிக்கும் ஆதினங்களுக்கு அடுத்த பிறவி என்ன? என்பதையும் சொன்னால் தேவலாம். ஜி.வெங்கடாச்சலம், வத்தலக்குண்டு, திண்டுக்கல் மாரிதாஸுன் கைது கருத்து சுதந்திரந்திற்கு எதிரானதா? திமுக இதில் பின்வாங்குமா? கருத்து சுதந்திரத்தையும், அவதூறு பரப்பலையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாது. ஒரு இயக்கத்திடம் இருந்து ...

எஸ்.வேதவள்ளி, பூந்தமல்லி இடைத் தேர்தலில் கிடைத்த உதையால் பாஜக அரசு பெட்ரோல் வரியை குறைத்துவிட்டு மற்ற கட்சிகள் ஆளும் மாநில அரசுகளையும் குறைக்க சொல்லி உள்ளதே? ஆனைக்கு விழுந்த அடியை பூனைகளும் பகிர்ந்து கொள்ள வேண்டுமாம்! சரி தான்! இந்த பெட்ரோல்,டீசல் விலையேற்றத்தின் பின்னுள்ள உண்மையான திமிங்கலம் ரிலையன்ஸ் தான். இன்றைக்கு பெட்ரோலிய நிறுவனங்களின் சரிபாதி உற்பத்தி அம்பானி கைகளில் தான் உள்ளது. அவர் தான் விலையேற்றத்தின் முழு காரணகர்த்தா! அந்த திமிங்கலத்திற்கு மக்களையே தீனியாக்கி ஆள்பவர்கள் தான் மத்திய ஆட்சியாளர்கள்! க.முருகானந்தம், காஞ்சீபுரம் ...

ஏ.செந்தில், மதுரை உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல்வாதிகள் புதிய கட்சிகள் தொடங்கத் தான் இந்த ஜனநாயகம் பயன்படுகிறதே தவிர, சாமானிய மக்களுக்கு என்ன பயன்? சாமானிய மக்களையும் அரசியல்வாதிகள் ஆக்கிக் கொண்டுள்ளது நம் ஜனநாயகம். பணமில்லாமல் தேர்தல் களத்திற்கு வராதே என்று இன்று மக்கள் அரசியல்வாதிகளை மிரட்டத் தொடங்கிவிட்டனர்…! முகைதீன் புதல்வன், இராமேஷ்வரம், இராமநாதபுரம் கேள்வி கேட்பவர்கள் அறிவாளிகளா? பதில் சொல்பவர்கள் அறிவாளிகளா? முட்டாள்தனமான கேள்விகளை எதிர்கொள்ளத் தெரிந்த அறிவாளிகளும் உண்டு. அறிவாளிகளைக் கூட முட்டாள்கள் ஆக்கிவிடும் கேள்வியாளர்களும் உண்டு. ...

நீட் விவகாரத்தில் அதிமுகவின் நிலைபாடு என்னவென்பது இன்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. ”நீட் தேர்வை நிரந்தரமாக விலக்க கோரும் மசோதாவை அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தவுடன் படபடவென்று திமுக மீது குற்றம் சுமத்திவிட்டு அதிமுக வெளி நடப்பு செய்துள்ளது! அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பேசியிருப்பதை கவனியுங்கள்; நீட் தேர்வு என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பு. அதை எதிர்த்து யாரும் செயல்பட முடியாது. மாநில அரசுகள் இதை எதிர்க்க முடியாது. ஆனாலும், நாங்கள் சட்ட போராட்டம் தொடர்ந்து ...