சிறு தீப்பொறியாலும் பெருங்காட்டை அழிக்க முடியும் என்பதற்கேற்ப சிற்றிதழ் என்றாலும், அறச் சீற்றத்தின் வீச்சு காரணமாக அறம் இணைய இதழின் வெளிப்பாடுகள் பரந்துபட்ட மக்களிடமும், கருத்து சென்று சேர வேண்டிய உரிய தளங்களிலும் சென்று சேர்ந்த வண்ணம் தான் உள்ளது! தேர்தல் காலங்களில் நாம் எழுதிய கட்டுரைகள் பிரபல பத்திரிகைகளிலும்,சிறு பத்திரிகைகளிலும் எடுத்து பிரசுரம் செய்யப்பட்டன. வாட்ஸ் அப்களில் பெரிய அளவு வலம் வந்ததன. மொத்தத்தில் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தின. அறம் தன் வாசகர்களோடு இணைந்து அதன் சமூகக் கடமையை சிறப்பாக செய்தது! ...
சில லட்சம் மக்களை ஒன்பது மாதத்திற்குள் அறம் சென்றடைந்துள்ளது! நேர்மையான, சமரசமற்ற இதழியலை சாத்தியப்படுத்தும் ஒரு எளிய மனிதனின் முயற்சியே இது! அறம் ஒரு பெரிய ஊடகமல்ல, பாரதி சொல்லியதைப் போல, அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்; வெந்து தணிந்தது காடு; தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று உண்டோ…! என்பது தான் உண்மை! இந்த இதழியல் முயற்சிக்கு நான் வாசகர்களை நம்பித் தான் குருட்டாம் போக்கில் என் முழு உழைப்பையும் அர்ப்பணித்து இயங்கி வருகிறேன். எந்த நல்ல முயற்சிகளுக்கும் ...