அம்பேத்கர் அவமதிப்பை வெறுமே கடந்து போக முடியுமா? உங்கள் வெறுப்பு அம்பேத்கர் மீதானது மட்டுமல்ல, மக்களை பாதுகாக்கும் கவசமாக உள்ள அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தின் மீது தானே! அதை அழிப்பதற்கு தான் ஆட்சிக் கட்டிலுக்கு வந்திருக்கிறீர்கள் என்று எங்களுக்கு தெரியாதா..? நாங்கள் அனுமதிப்போமா..? நாடாளுமன்றம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. அமித்ஷா அமைச்சர் பதவியை விட்டு வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் என்ற முழக்கங்கள் நாடு முழுவதும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள ...
டாக்டர் அம்பேத்கரை சமூகப் போராளியாக, சட்ட நிபுணராக, அரசியல் தலைவராக, அமைச்சராகத் தான் இந்திய மக்கள் அறிவர் ! அண்ணல் அம்பேத்கர், ‘தலைசிறந்த பொருளாதார மேதை’ என்பதை பலர் அறியார் ! நோபல் பரிசு பெற்ற அமெர்த்தியா சென் அவர்களின் மொழியில் சொன்னால், “இந்தியாவின் முற்போக்கு பொருளாதாரத்தின் தந்தையே டாக்டர் அம்பேத்கர் தான்.” கொலம்பியா பல்கலை வளாகம் அளப்பரிய சுதந்திரத்தை அவருக்கு வாரி வழங்கியிருந்தது. தலைசிறந்த பல்கலைக் கழகம் தனக்கு வழங்கிய வாய்ப்பை முழுமையாக அவர் பயன்படுத்திக் கொள்ள விழைந்தார். கொலம்பியா பல்கலைக் கழகத்தில் ...