அன்றைய தமிழகத்தில் தமிழ் தேசிய இயக்கங்களுக்கும், திராவிட இயக்கங்களுக்கும் டாக்டர்.மு.வவின் நூல்கள் ஒளிவிளக்காக திகழ்ந்தன. பெருந்திரளான இளைஞர்கள் மு.வவை தங்கள் கதாநாயகனாக, வழிகாட்டியாக கொண்டிருந்தனர். திருமணங்கள், பிறந்த நாட்கள் ஆகியவற்றுக்கு மு.வரதராஜனார் நூலை பரிசளிப்பதில் அளவில்லா ஆனந்தம் அடைந்தனர்..! தமிழன்னையின் தவப்புதல்வர்களில், மு.வ.என்று தமிழ் கூறும் நல்லுலகில் அன்புடன் அழைக்கப்படும் டாக்டர் மு.வரதராசனாருக்கு தனிச்சிறப்பு உண்டு. அவருடைய வாழ்க்கை வரலாற்றை உள்வாங்கி செயல்படும் இளைஞர்கள் தங்கள் தனித்திறமையை உணர்ந்து விடாமுயற்சியையும் கடின உழைப்பையும் மூச்சுக் காற்றாகக் கொண்டு மகத்தான வெற்றி பெறுவார்கள். இது உறுதி. ...