தமிழகத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக1980 களின் இறுதியில் பார்க்கப்பட்டவர் ராமதாஸ்! அப்போது அவர் வெறும் சாதி தலைவராக மட்டும் பார்க்கப்படவில்லை! இடதுசாரி சிந்தனையாளராக, பெரியாரிஸ்டாக, அம்பேத்காரை கொண்டாடுபவராக அவர் அறியப்பட்டிருந்த காலம் ஒன்றிருந்தது! தனது கட்சியில் தலித்துகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடைமுறையில் நிருபித்தவர் அவர்! அவரது எளிமை,சமூக நோக்கு,சமத்துவ போக்கு ஆகியவற்றுக்காக அவர் மதிக்கப்பட்டார்! இதுவே அவரது அடையாளமாகவும் ஆரம்ப காலங்களில் இருந்தது! மக்கள் பிரச்சினைகளுக்காக – சமூக அநீதிகளுக்கு எதிராக – எத்தனையெத்தனையோ போராட்டங்கள், முன்னெடுப்புகள், தெளிவான அறிக்கைகள்…என்று மக்களிடம் ...