த்ரிஷ்யம் 2013 ல் ஜீத்து ஜோஸபின் எழுத்து – இயக்கத்தில் வெளியான ‘த்ரிஷ்யம்’ மலையாளப் படம் கேரளாவை ஓர் உலுக்கு உலுக்கியது. சிறந்த திரைப்படத்துக்கெனவும் , கான்ஸ்டபிள் பாத்திரத்தில் சிறந்த நடிப்பை வழங்கியதற்காக  கலாபவன் ஷாஜோனுக்கும் கேரள அரசின்  விருதுகளைப் பெற்றுத் தந்தது த்ரிஷ்யம்.    சிறந்த நடிகை (ஆஷா ஷரத்) மற்றும்  சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருதுகளையும் பெற்றது. தென்னிந்தியத் திரைப்பட சர்வதேச விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குநர் , சிறந்த நடிகர் (கலாபவன் ஷாஜோன் ) என மூன்று விருதுகளைப் பெற்றது. இந்தியாவின் சிறந்த த்ரில்லர் படங்களில் முதல் வரிசையில்போய் அமர்ந்தது த்ரிஷ்யம். அது குறித்து மேலும் சில சுவைக்கும் தகவல்கள்…. ஏறத்தாழ 15 கோடி ரூபாய்க்கு இதன் ரீமேக் உரிமை விற்கப்பட்டதாகச் சொல்லுகிறார்கள்…! 2014 இல் ‘த்ரிஷ்யா’ என்ற பெயரில் கன்னடத்தில் மறு ...