போதைப் பொருள், ரத்தம் தெறிக்கும் கொலைகள், இடையறா வன்முறை..இதுதான் விக்ரம்! முழுக்க முழுக்க இருள் சூழ்ந்த வன்முறைக் காவியமாக உருவாகியுள்ளது புதிய விக்ரம்! விட்டில் பூச்சிகளான இளம் இரசிகர்களுக்கு இது ‘வேற லெவல்’-ஆக இருக்கலாம். ஒரு தேர்ந்த கலைஞனான கமல் தயாரித்த படமா இது? படு குப்பை! உலகில் உள்ள அத்துணை ஆயுதங்களையும் காட்டிக் கொண்டு, படம் முழுக்க இரத்தக் கவிச்சை அடிக்கும் பயங்கரவாதத்தை முன்னிறுத்தி, போதைப் பொருளைப் பயன்படுத்துவது ஆண்மைக்கு அழகு என்பதைப் போல சித்தரித்துக் கொண்டு இப்பொழுது தமிழர் வாழும் நிலமெல்லாம் ...