கட்டுக் கடங்கா ஊழல்,கொட்டமடிக்கும் அதிகாரிகள், தட்டிக் கொடுக்கும் தமிழக ஆட்சியாளர்கள்…! இது தான் இன்றைய தமிழக நெடுஞ்சாலைத் துறையின் தற்போதைய நிலைமை! தமிழ் நாடு நெடுஞ்சாலைத் துறையில் நிர்வாக வசதிக்காக தேசிய நெடுஞ்சாலை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, நபார்ட் மற்றும் கிராமச் சாலைகள், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம், சென்னை – கன்னியாகுமரி தொழில் தட திட்டம், திட்டங்கள், பெருநகரம், வடிவமைப்பு, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், முதன்மை இயக்குநர் அலுவலகம் என்று பத்து அலகுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறிய சதி திட்டங்கள்! தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் ...