அ.தி.மு.க ஆட்சியின்போது நெடுஞ்சாலைத் துறையில் எடப்பாடி பழனிசாமி சொல்படி செயல்பட்ட   ஊழல் தலைமைப் பொறியாளர்களைப்  பற்றி  அறம் ஆன்லைனில் எழுதியிருந்தோம். அதனைத் தொடர்ந்து  ஊழல் பெருச்சாளிகளான தலைமைப் பொறியாளர்கள் கீதா, சாந்தி, விஜயா, சென்னையில் பாலப் பணிகளை விரைந்து முடிக்க முனைப்பு காட்டாத சுமதி ஆகியோரை  இந்த அரசு பணியிட மாறுதல் செய்தது பாராட்டக்கூடியதாக இருந்தது! ஊழலற்ற ஆட்சியைப் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.  ஆனால் இந்தத் துறையில் இப்போது நடந்து கொண்டிருக்கும் அனைத்தும் அந்த  நம்பிக்கையை சிதைத்துவிட்டது. ஊழலின் நாற்றம் வெளியேறி விடாமல் பார்க்கும் ...

அதி மோசமான கடந்த அதிமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்தனர். பத்தாண்டுகளுக்கு பிறகு வந்துள்ள திமுக ஆட்சியாளர்கள் ஒரு பக்குவத்தை பெற்றிருப்பார்கள் என மக்கள் நம்பினார்கள்! ஒரு பக்கம் மக்கள் விரோத – மாநில உரிமைகளை பறிக்கும் பாஜக ஆட்சியை எதிர்க்க வேண்டிய சரித்திர கடமையையும் திமுக சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில் எப்படி இந்த ஊழல்களுக்கு துணை போகிறது? முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு இது போனதா எனத் தெரியவில்லை. இந்த ஆட்சியில் சில நல்ல முன்னேற்றங்கள், பாசிட்வ்வான அணுகுமுறைகள் நிதித் துறை, ...