பத்து ஆண்டுகளாக நெடுஞ்சாலைத் துறையில் நடந்த ஊழல்களை, அந்த ஊழல்கள் மூலம் எவ்வளவு பணம் கொள்ளை அடிக்கப்பட்டது என்கிற விவரங்களைக் கண்டுபிடிக்க அதிவேகப் பாய்ச்சலுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் தி.மு.க ஆட்சியின் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு. ஆனால், அவரது நோக்கம் ஊழலை ஒழிக்கவா? ஒளிக்கவா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது..! அதிமுக ஆட்சியின் ஊழலை அம்பலப்படுத்த சாலைகளில் ஆய்வு எ,வ.வேலுவின் கவனம் முதலில் செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தங்கள் மூலம் அ.தி.மு.க ஆட்சியில் நடந்த ‘ஐந்து வருட குத்தகை ஊழல்’ மீது சென்றது. 4,500 கோடி ...