சங்கடப்படுத்தும் அளவுக்கு சர்க்கரை நோய் தீவிரமடைய தவறான உணவுப் பழக்கம், உடல் உழைப்பின்மை என பல அடிப்படை காரணங்கள் உள்ளன! இது வந்து விட்டால் வாழ்நாள் சர்க்கரை நோயாளியாகி விடுகிறார்கள். ஆனால், நெல்லிக்காய், நாவல்கொட்டை, திரிபலா… சூத்திரத்தை தெரிந்து கொண்டால் தூள் கிளப்பலாம்! சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிட்டாலும் வெவ்வேறுவிதமான பாதிப்புகள் எப்போது வரும் என்று கணிக்கமுடியாத நிலையில் நீரிழிவாளர்களின் வாழ்க்கைப் பாதை சென்று கொண்டிருக்கிறது. சர்க்கரை நோய்க்கு சரியான மருந்து கிடைக்காதா என்று மக்கள் அலைமோதிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில் உணவுக் கட்டுப்பாடுகள் அவசியம் ...

நீரிழிவு, என்றழைக்கபடும் சர்க்கரை நோய் உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அதுவும் இந்தியாவில் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. தொற்றா நோயான இந்நோய் உயிரைப் பறிக்கும்  அளவுக்கு மோசமானதா? அந்த அளவுக்கு சர்க்கரை நோய் கொடியதா? ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால் அது வாழ்நாள் முழுவதும் சம்பந்தப்பட்டவரை விட்டு விலகாது என்பதும், இது ஒரு பரம்பரை நோய் என்பதும் உண்மையா? இதுபற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்; சர்க்கரை வியாதி என்று சொல்வதைவிட அதை ஒரு குறைபாடு என்று சொல்வதே சரியாக இருக்குமென்று நினைக்கிறேன். பொதுவாக ...