அட, எல்லாத்திலுமா சாதியப் பார்வை…? நீர், நிலம், தீ, காற்று, வானம், திசைகள், தாவரங்கள்,உயிரினங்கள்…ஆகிய ஒவ்வொன்றிலுமே சாதியக் கண்ணோட்டமா..? என நம்மை திகைக்க வைக்கும் நூலை சூழலியல் ஆய்வு நோக்கில் படைத்துள்ளார் நக்கீரன். எத்தனையெத்தனை புதிய கோணங்களில் நம்மை சிந்திக்க தூண்டுகிறார்..வாவ்! நம் நாட்டின் பாரம்பரியமான கருப்பட்டியை கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார்; ஆனால் வெளிநாட்டில் இருந்து வந்த தேங்காய் எப்படி கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டது’ என்று கேள்வி எழுப்புகிறார் நக்கீரன். ‘சூழலும் சாதியும்’ என்ற அவரது புதிய நூல் வெளி வந்து மூன்று தான் ஆகியுள்ளது. ...