உலக அரங்கில் அமெரிக்க ஆதிக்கத்தை வலுப்படுத்தவும்,எழுச்சி பெற்று வரும் சீனப் பொருளாதாரத்தை சிதைக்கவும் அமெரிக்காவால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தோ பசிபிக் பொருளாதார அமைப்பு என்ற கூட்டணியால் இந்தியா பெறப் போகும் பலன் என்ன? பாதகம் என்ன? என ஒரு அலசல்! இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க அரசும் அதன் அதிபர் ஜோ பைடனும் ஏற்படுத்த இருக்கும் இந்தோ பசிபிக் பொருளாதார அமைப்பு -Indo Pacific Economic Framework- என்ற கட்டமைப்பில் இந்தியாவும் இணையும் என்று நமது பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பத்து தினங்களுக்கு முன்பு ...
பஞ்சமும், பதட்டமும், கலவரச் சூழலுமாக இலங்கை தகிக்கிறது! உணவுக்கும், எண்ணெய்க்கும் நீண்ட க்யூ வரிசைகளில் காத்து கிடந்து சிலர் உயிரிழந்துள்ளனர்! கொந்தளிப்பின் உச்சத்தில் இலங்கை மக்கள், ராஜபக்சே மாளிகையை முற்றுகையிட்டு போராடுகின்றனர். என்ன நடக்கின்றது? தேயிலைக்கும், மீனுக்கும் இயற்கை சூழல்களுக்கும் பெயர்போன இலங்கையின் இன்றைய சூழலுக்கு பல காரணிகள். ஆனால், அவற்றில் முதன்மையானது ஆட்சிக்குளறுபடி -Mismanagement என்றால், அது மிகையல்ல. அதிபர் ராஜபக்சே , ” நாடு ஒரு இக்கட்டான சூழலில் உள்ளது, நான் பன்னாட்டு பண நிதியத்திடம் (IMF) உதவி கேட்டுள்ளேன் ; அவர்களும் சில ...
திடீரென்று அமேசான் நிறுவனத்தின் மீது ஆர்.எஸ்.எஸ் பாய்கிறதே..? ஏன் இந்த பாய்ச்சல்..? இதன் பின்னணி என்ன..? அமேசான் இந்தியாவில் மிக வெற்றிகரமாக இயங்கும் பிரதான நிறுவனமாக உள்ளது! இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளிலும் அமேசான் தான் முதலிடத்தில் உள்ளது! தற்போது அமேசான் முதல் முறையாக ஈகாமர்ஸ் மற்றும் ரீடைல் வர்த்தகத்தைத் தாண்டி வெல்த் மேனேஜ்மென்ட் துறையில் முதலீடு செய்து வருகிறது. அமேசான் நிறுவனம் ஸ்மால்கேஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 40 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டுச் சுற்றில் முதலீடு செய்துள்ளது!அமேசான் இந்தியாவில் நேரடியாக ஒரு ...