சசிகலா வருகையை வேறெவரைக் காட்டிலும் ஊடகங்கள் ஊதி பெரிதுபடுத்தி வருகின்றன! சசிகலாவைக் குறித்த பிரம்மாண்டமான மாயைகள் கட்டமைக்கப்படுகின்றன! நாளை அவர் வருகையை நேரடி ஒளிபரப்பாக்க தொலைகாட்சி ஊடகங்கள் பல மும்முரமாக திட்டமிட்டு வருகின்றன! இன்றைய காலகட்டத்தில் எந்த மோசமான அரசியல்வாதிகளைக் காட்டிலும், ஊடகங்களே மிக ஆபத்தானவையாக உள்ளன! சசிகலா இந்த நாட்டுக்கோ, மக்களுக்கோ தியாகம் செய்தோ,போராட்டம் நடத்தியோ சிறை சென்று திரும்பவில்லை! எனினும், அவரை மிகைப்படுத்தி சதா சர்வகாலமும் ஊடகங்கள் பேசிக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் உள்ளன! நாட்டிற்கு தேவையான முக்கியமானவர்களை கவனப்படுத்துவதை விடவும் ...