இந்த தேர்தலில் வரலாறு காணாத விதத்தில் கரன்சியை தன்னுடைய தொகுதிலும், தமிழகம் முழுமையிலும் அள்ளிவிட்டார் எடப்பாடி? இப்படி பணத்தை அள்ளி இறைப்பதற்கு எப்படியான ஊழல்களை அவர் செய்திருப்பார் என்பதற்கு இவை இரண்டும் சின்ன சாம்பிள் அவ்வளவே! தமிழக நெடுஞ்சாலைத்துறையில்  ஆன்லைன் மூலமாகத்தான் டெண்டர் பெறப்படுகிறது,  டெண்டர்  திறக்கப்படும்  வரை யார் டெண்டர் போட்டிருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியாது’’  என்று  எடப்பாடியார் உரைவீச்சு! ஆனால் உண்மை நிலவரம் வேறு. வேலைக்கான தொகையை மட்டுமே ஆன்லைனில்  குறிப்பிடுவார்கள். அத்துடன் வைப்புத்தொகை, கருவிகள் தளவாடங்கள் சான்றிதழ், தகுதிச் சான்றிதழ் ...